மனித வாழ்வில் இன்பம்- துன்பம், பாவம்- புண்ணியம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். ஒவ்வொருவரும் முற்பிறவிக் கர்மாவை இந்த மண்ணில் தீர்க்கவே பிறவியெடுக்கின்றனர். மரணத்திற்குப்பிறகு அனை வரும் எடுத்துச்செல்வது பாவம் மற்றும் புண்ணியங்களை மட்டுமே. இந்தப் பிறவியில் நேரும் நன்மை- தீமை அனைத்தும் முற்பிறவியின் தொடர்ச்சியே. சாபங்கள், தோஷங்களெல்லாம் அவரவர் வாங்கிவந்த வரங்களே ஆகும். சாபம் எவ்வாறு தோஷங்களாக மாறி அனைவரையும் நிலைகுலைய வைக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
1. பித்ரு சாபம்
மூதாதையர்களுக்குச் செய்யவேண்டிய கர்மங்களை செய்யாமலிலிருப்பது, தாய்- தந்தை,பாட்டி- தாத்தா ஆகியோரை உதாசீனப்படுத்தி ஒதுக்கிவைத்தல், மூதாதையர் களுக்கு திதி, தர்ப்பணங்கள் செய்யாமலிலிருப்பது ஆகியவற் றால் ஏற்படுவது பித்ரு சாபமாகும்.
சூரியன், சனி சேர்க்கை; சூரியனுடன் ராகு- கேது, மாந்தி போன்ற கிரகங்கள் சேர்வது மற்றும் சூரியன் பாதகாதிபதியுடன் சேர்ந்திருத்தல் போன்ற கிரக அமைப் பினால் பித்ரு சாபம் ஏற்பட்டு துயரங்களை ஏற்படுத்திவிடு கிறது. இதனால் ஆண் குழந்தைகள் பிறக்காது. பிறந்தாலும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் ஏற்படும்.
தாய்- தந்தையைப் பேணிக்காப்பது, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது, புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் நீராடுவது, 21 சிவத்திருத்தலங்களை தரிசிப்பது போன்றவற்றால் பித்ருசாபம் விலகும்.
2. பிரம்ம சாபம்
வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையைத் தவறாகப் பயன்படுத்துவது, வித்தைகளை சொல்லிலிக்கொடுக் காமல் மறைத்தல் பிரம்ம சாபமாகும். ஜாதகத்தில் குரு, புதன், ராகு- கேதுவின் பிடியில் இருப்பது; குரு, புதன் பகைவர் களோடு சேர்ந்திருப்பது பிரம்ம சாபத்தைக் குறிக்கும். இந்த சாபத்தினால் புத்தி பேதலிலிக்கும். ஞானசூன்யமாக இருப்பார்கள். படிப்புக்கேற்ற உத்தியோகம் இருக்காது.
உழைப்பிற்கேற்ற ஊதியமும் கிட்டாது.
இந்த தோஷம் விலக தினமும் சரஸ்வதி மந்திரத்தை உச்சரிப்பதும், ஹயக்ரீவரை வழிபடுவதும் மிகவும் உத்தமம். மேலும் கும்பகோணத்தை அடுத்து பூந்தோட்டம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோவிலிலில் புதன்கிழமையன்று சரஸ்வதி மற்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கிவர பிரம்ம சாபம் விலகும்.
3. பிரம்மஹத்தி சாபம்
உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் பிரம்மனால் படைக்கப்பட்டவையாகும். படைக்கப்பட்ட உயிர்களுக்கு தெரிந்தோ தெரியா மலோ மரணம் ஏற்படக்காரணமாக இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. சனி, செவ்வாய், மாந்தி சேர்க்கை; சனி, செவ்வாய் பாதகாதிபதியோடு சேர்க்கை; சனி, ராகு, மாந்தி சேர்க்கை மற்றும் ராகு பாதகாதிபதியோடு சேர்தல் ஆகிய அமைப்புகள் இந்த தோஷம் உள்ளதை உணர்த்தும்.
இந்த தோஷத்தினால் வாழ்வில் அனைத்து முயற்சிகளும் தடைப்படும். விபத்துகள் சர்வசாதாரணமாக நிகழும். சிலர் கொலை செய்யப்படலாம் அல்லது ஆயுதங்களால் மரணம் நிகழலாம். கடவுள் அருள் கிட்டாது.
இந்த தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் ராமேஸ்வரம், கொடுமுடி சென்று பிரம்ம ஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். மேலும் கும்பகோணம் அருகிலுள்ள திருவிடை மருதூர் மகாலிலிங்கேஸ்வரர் கோவிலிலில் பிரம் மஹத்தி தோஷநிவர்த்தி பூஜை செய்து கொள்ளலாம்.
4. பிரேத சாபம்
பிரேத சாபம் என்பது அகால மரணம் ஏற்படுவதாகும். இறந்துபோனவரின் உடலை வைத்துக்கொண்டு இழிவாகப் பேசுதல், பிணத்தைத் தாண்டுதல், பிணத்தின் இறுதிக் காரியங்களைச் செய்யவிடாமல் தடுத்தல் போன்ற செயல்களால் இந்த சாபம் உண்டாகும். மாந்தி எந்த கிரகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறதோ அந்த கிரகத்தின் காரகத்துவ அடிப்படையில் பிரேத சாபம் ஏற்படும்.
செவ்வாயுடன் மாந்தி சேர்ந்தால் சகோதர- சகோதரிகள் தொடர்பானதாகும். இந்த பிரேத சாபத்தினால் ஆயுள் பங்கம், அகால மரணம் ஏற்படும். தொழில் முடங்கும். சுபகாரியங்கள் தள்ளிக்கொண்டே போகும்.
திலஹோமம், சண்டி ஹோமம் செய்தல், மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தினை உச்சரித்தல் ஆகியவற்றால் இந்த தோஷம் விலகும்.
5. பெண் சாபம்
நம்பி வந்த பெண்களை ஏமாற்றுவது, சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, கட்டிய மனைவியைக் கைவிடுவது பெண் சாபமாகும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு சனி, சந்திரன்; சனி, சுக்கிரன் சேர்ந்து அல்லது சமசப்தமாகப் பார்வையிட்டிருக்கும். இந்த சாபத்தினால் வம்சம் நாசமாகும்.
இதிலிருந்து விடுபட பெண்களை ஆதரிப்பது, சகோதரிகளை மதித்து நடப்பது, தேவி உபாசனை செய்வது மற்றும் புனிதத்தலமான ராமேஸ் வரத்தில் நீராடுவது போன்றவற்றை மனப்பூர்வ மாகச் செய்யவேண்டும்.
6. சர்ப்ப சாபம்
பாம்புகளைக் கொல்வது, அவசியமில்லாமல் பாம்புப்புற்றுகளை அழிப்பது சர்ப்ப சாப மாகும். ஜாதகத்தில் 5-ல் ராகு- கேது, 2, 7, 8-ஆம் பாவங்களில் ராகு- கேது இருந்து 8, 12-க்குரியவர்கள் சேர்க்கை, பாதகாதிபதி சேர்க்கை ஆகியவை சர்ப்ப சாபத்திற்கான கிரக அமைப்பு களாகும். இதனால் திருமணத்தடை, குழந்தை யின்மை, வீட்டில் சண்டை, அமைதியின்மை போன்றவை ஏற்படும்.
இத்தகையவர்கள் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் திருத்தலங்களுக்குச் சென்று சர்ப்பசாந்தி செய்து கொள்வதால் சர்ப்ப தோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.
7. கோ சாபம்
பசுவை வதைப்பதும், பால் மரத்துப்போன பசுவை வெட்டக் கொடுப்பதும், கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பதும், பசு தாகத்தினால் தவிக்கும்போது தண்ணீர் தராமலிலிருப்பதும் கோ சாபமாகும்.
நான்காம் பாவத்தில் தீயகிரகம் இருப்பதும், சுக்கிரனுடன் தீயகிரகம் சேர்வதும் கோ சாபம் உள்ளதைக் காட்டும். இதனால் வீட்டில் பசு இறத்தல், காணாமல் போதல் போன்றவை நிகழும். எவ்வித வளர்ச்சியும் இருக்காது.
இந்த தோஷத்திற்குள்ளானவர்கள் பசு மாட்டிற்கு பச்சைத் தழைகள், காய்கறிகள் தானம் தரலாம். கோசாலைகளுக்குச் சென்று பசுமாடு களுக்குப் பணிவிடை செய்வதாலும், கோபூசை செய்வதாலும் கோ சாபம் விலகும்.
8. பூமி சாபம்
பூமியை காலால் உதைப்பது, பிறரது நிலத்தை அபகரிப்பது, நிலத்தினை பாழ்படுத்துவது பூமி சாபமாகும். செவ்வாய், புதன்; புதன், கேது மற்றும் செவ்வாய் நீசம்; செவ்வாய் பாவகிரகங் களுடன் சேர்ந்திருத்தல் போன்ற அமைப் புகள் இந்த சாபத்தை உணர்த்தும். இதனால் சொத்துகள் இழப்பு, சொந்த வீடு இருந்தாலும் வாடகை வீட்டில் வசிப்பது, சொத்துக்காக நீதிமன்றம் செல்லுதல் ஆகியவை சர்வசாதாரண மாக நிகழும்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் சென்று அங்குள்ள பூவராகர் கோவிலிலில் அர்ச்சனை, வழி பாடு செய்தாலும், பழனி முருகன்கோவில் சென்று வழிபாடு செய்தாலும் பூமி சாபம் விலகும்.
9. விருட்ச சாபம்
பசுமை நிறைந்த மரங்களை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை வெட்டுவதும், மரங் களைப் பட்டுப்போகச் செய்வதும் விருட்ச சாபமாகும். நான்காம் பாவத்தில் பாவிகள் சம்பந்தப்படுவது, வீட்டிலோ தோட்டத்திலோ மரங்கள், செடிகள் அழிந்துவருவது, வீட்டில் வைக்கப்பட்ட செடிகள் வளராமல் இருப்பது போன்றவற்றால் இந்த சாபம் இருப்பதை அறியலாம். இந்த சாபத்தினால் கடன், வியாதி, அங்கஹீனம் ஏற்படும்.
இந்த தோஷம் உடையவர்கள் சிவாலயங் களிலுள்ள தல விருட்சங்களுக்கு நீர் ஊற்றிவர, மெல்ல மெல்ல சாபங்கள் நீங்கும்.
10. கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய குடிநீரை பாழ்செய்தல், ஓடும் நதியை அசுத்தம் செய்வது, அடுத்தவர் களுக்குரிய நீரைப்பறித்தல் கங்கா சாபமாகும்.
சனி, சந்திரன் சேர்க்கை மற்றும் சமசப்தமப் பார்வை; நான்காம் பாவத்தில் பாவகிரகங்கள் இருப்பது போன்ற அமைப்புகள் இந்த சாபத் தைக் குறிக்கும். இந்த தோஷத்தினால் வீடு மற்றும் தோட்டங்களில் கிணறு, போர் போட்டால் நீர் கிடைக்காது. நீர் சம்பந்தமான நோயினால் அவதிக்குள்ளாவர்.
மேற்கண்ட தோஷத்திற்குள்ளானவர்கள் அஸ்த நட்சத்திர நாளில் ராமேஸ்வரம் சென்று புனித நீராடினால் கங்கா சாபம் நீங்கும்.
11. தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது, ஆலயத் தினை சேதப்படுத்துவது மற்றும் ஆலயத்தின் பொருட்களைத் திருடுவது தேவ சாபமாகும்.
ஒன்பதாம் பாவமும் குருவும் பாவர்களின் தொடர்பினைப் பெறுதல் தேவ சாபமாகும். இதனால் உறவினர்கள் பிரிவது, வம்சம் அழிவது, சரியான நேரத்தில் ஆதரவு கிடைக்காமல் போதல்- தேவ சாபத்தின் அறிகுறியாகும்.
ஊர்விட்டு ஊர், மாநிலம்விட்டு மாநிலங் களிலுள்ள சிவாலயங்களில் நடக்கும் கும்பாபி ஷேகங்களில் கலந்துகொள்வது, கும்பாபி ஷேகத் திருப்பணிகள் மேற்கொள்வதால் தேவ சாபம் நீங்கும்.
12. ரிஷி சாபம்
ஆச்சாரிய புருஷர்களை அவமதிப்பது, உண்மையான பக்தர்களை அவமதிப்பது ரிஷி சாபமாகும். எட்டாம் பாவத்தில் சனி, கேது சேர்க்கை இருந்தால் இந்த சாபம் உள்ளதை அறியலாம். இதனால் வம்ச அழிவும், உறவினர் பிரிவும் நிகழும்.
தினமும் கோவில் சென்று சாது சந்நி யாசிகளுக்கு உணவளிப்பது, மகான் களிடம் ஆசிர்வாதம் வாங்குதல் போன்றவற்றினால் ரிஷி சாபம் விலகும்.
13. முனி சாபம்
எல்லை தெய்வங்கள், சிறிய சிறிய தெய்வங்களுக்கு வழங்கவேண்டிய மரியாதைகளையும் பூசைகளையும் மறுப்பது முனி சாபமாகும்.
இந்த சாபத்தினால் அகால மரணம், சொத்துகள் முடக்கம், செய்வினைக் கோளாறு, குடும்பப்பிரிவு, வம்சவிருத்தி ஏற்படாமல் இருத்தல் போன்றவை நிகழும். பாதக ஸ்தா னத்தில் சனி இருப்பது, பாதகாதி பதியுடன் சனி, ராகு- கேது இணைவு முனி சாபத்தைக் குறிக்கும்.
எல்லை தெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் வணங்கு வது, 21 நாட்கள் தொடர்ந்து பைரவருக்கு நெய்தீபம் ஏற்றுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, கும்பாபிஷேகப் பணிகளை மேற் கொள்வது போன்றவற்றால் முனிசாபம் விலகும்.
14. குலதெய்வ சாபம்
நம் மூதாதையர்கள் பூஜித்த தெய்வத்தினைப் பூஜிக்காமல் மறுப்பது குலதெய்வ சாபமாகும்.
ஐந்தாம் பாவத்திலோ, பாவாதிபதிக்கோ குரு பார்வையின்றி இருந்தால் குலதெய்வ சாபம் உள்ளதென அறியலாம். இதனால் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறத்தல், பொருளாதாரம் சீர்குலைதல் ஆகியவை நடக்கும்.
குலதெய்வத்தினைப் பராமரிப்பது, சிறப்புப் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்வதன்மூலம் குலதெய்வ சாபம் நீங்கும்.
மேற்கண்ட பரிகாரங்கள் பழம் பெரும் ஜோதிட நூல்கள், நாடி ஜோதிட நூல்கள், சித்தர்கள் நூல்கள் ஆகியவற்றிலிலிருந்து தொகுக்கப் பட்டவை.
செல்: 98944 94915